Categories
அரசியல் மாநில செய்திகள்

காழ்ப்புணச்சியா…? அதற்கு அம்மா உணவகமே சாட்சி…. முதல்வர் ஸ்டாலின் சுருக் பதில்…!!!

சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். பள்ளிக் கல்வித்துறைக்கும், உயர் கல்வித் துறைக்கும் அதிக ஒதுக்கீடுகளை செய்தவர். இந்நிலையில் புதிய திமுக அரசில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறுகின்றனர்.

இது நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர், அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. இதற்கு அம்மா உணவகம் சாட்சி. அப்படி காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டால் அம்மா உணவகம் அந்தப் பெயரிலேயே செயல்படாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |