காவல்துறை அதிகாரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் நாட்டில் உள்ள டிவைன் காவல்நிலையத்தில் ரீட்ஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காவல்நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஒரு இளைஞர் காவலாராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த வாலிபரை ரீட்ஸ் தன்னை விட வயதில் சிறியவர் என்பதாலும், தன்னை விட அனுபவம் குறைந்தவர் என்பதாலும் அடிக்கடி கேலி செய்துள்ளார். அப்போது ரீட்ஸ் வாலிபரின் பேண்ட்டுக்கு உள்ளே கையை வைத்து அவரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக இருக்கிறது என்று கேலி செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன வாலிபர் தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் ரீட்ஸ் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவல்நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் சக காவலரை மோசமான முறையில் கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இதனால் காவல்துறை அதிகாரி ரீட்ஸை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுடன், தேசிய தடை செய்யப்பட்ட பட்டியலிலும் சேர்க்கப்படுவார் என்று தீர்ப்பளித்தார்.