Categories
மாநில செய்திகள்

காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் தன் நலன் கருதாது இரவு பகலாக சாலைகளில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் காவல்துறையினர் பங்கு இன்றியமையாதது.

தற்போது தமிழக காவலர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது குற்றவாளிகள்காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நேரத்தில் காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |