Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காவலர் இறப்புக்கான உண்மையான காரணம்”…. சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல்….!!!!!

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேளாங்குளம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சித்ராதேவி மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகின்றார். இத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சித்ராதேவி தனது மகளுடன் சென்ற வருடம் மே மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மகளை பிரிந்த அசோக் குமார் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மனைவிடம் கேட்டிருக்கின்றார்.

ஆனால் அவர் மறுத்ததால் மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் சென்ற வருடம் மே மாதம் 10-ம் தேதி ஆயுதப்படை குடியிருப்பில் இருக்கும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதில் அசோக் குமாரின் தாய் தனது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சிறப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணையின்போது செல்போன்கள் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விற்பனை செய்தாக தகவல் வெளியானது. இதனால் இரண்டு பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். இதில் காவலர் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |