Categories
மாநில செய்திகள்

காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே பாருங்க…!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து.

இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.  தற்போது அந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. விடைக்குறிப்பு மற்றும் வினாக்களில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் டிச.,10-க்குள் தெரிவிக்கலாம். விடைக்குறிப்புகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Categories

Tech |