இன்று நாடுமுழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்ற 1959 வருடம் லடாக் பகுதியில் நடந்த சீனப்படை தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப்படை காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நாகை ஆயுதப் படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், எஸ்பி ஜவகர் கடலோர காவல்படை லெப்டினல் கணபதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிர் நீத்த 264 காவலர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து காவல்படை சார்பில் 51 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவு அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதனபின் பணியின்போது இறந்த சுபாஷ் சந்திரபோஸ் காவலர் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியினை ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.