உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்ற கூடிய வகையில் நாளை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்திருக்கின்ற காவலர் நினைவிடத்தில், நாளை காலை 8 மணி அளவில் காவலர்கள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஏற்றார்.
அதன் பிறகு உயிர் தியாகம் செய்த 151 பேரில் உருவம் பொறித்த நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதுமட்டுமன்றி உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.