Categories
தேசிய செய்திகள்

காவலர் பயிற்சி பள்ளியில் 29 போலீசாருக்கு தொற்று உறுதி….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஓரிரு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி மற்றும் போஸ்டர் ஊசியும் பொதுமக்கள் அதிக அளவில் போட்டு வருகின்றன. இதற்கிடையில் புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் 100க்கு மேற்பட்ட பயிற்சி போலீசாருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சமூகவலைதளத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் அங்கு உள்ள பயிற்சி போலீசார் 29 பேருக்கு தொற்று பதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 31ஆம் தேதி 6 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து காவலர் பயிற்சி பள்ளியில் 29 பேர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது பயிற்சி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி காவலர்கள் மேலும் சிலருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதால் கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |