சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடியில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்து காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருக்கிறது.