திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் ஜோதிகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி எம்.ஜி.ஆர் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து ஜோதி கணேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அந்த கடையில் இரவு நேர காவலாளியாக தேவேந்திரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று லாரிகள் மற்றும் ஒரு வேனில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தேவேந்திரனை சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு ஜவுளிக்கடைகள் நுழைந்து அனைத்து துணிகளையும் அள்ளி லாரிகளில் ஏற்றி அங்கிருந்து தப்பி சென்றனர்.
மேலும் அவர்கள் தேவேந்திரனையும் கடத்தி சென்று பொள்ளாச்சி பகுதியில் அவரை இறக்கிவிட்டனர். இதுகுறித்து அறிந்த ஜோதி கணேஷ் கடைக்கு சென்று பார்த்து நடந்து சம்பவம் குறித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் தனது கடையில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்துள்ளார். அந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பழனி நகர் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.