Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை”…. 2 மகன்களுடன் தர்னாவில் ஈடுபட்ட பெண்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க காசு இல்லை எனக் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்து திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை உங்களால் முடிந்ததை கொடுங்கள் என வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர். மேலும் அந்த பெண், துண்டை தரையில் விரித்து காசு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர் பண்ருட்டி அடுத்த ஒரையூரைச் சேர்ந்த பாரதிராஜா மனைவி வசந்தி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலீசாரிடம்  அவர் கூறுகையில் எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் எனது கணவர் பாரதிராஜா வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ததாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் கூறினார்.

இருப்பினும் தற்போது அவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகின்றது. இது பற்றி புகார் அளிக்க சென்றபோது போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். அவர்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் புகார் பற்றி விசாரணையை மேற்கொள்ளவில்லை. ஆகையால் போலீசருக்கு பணம் கொடுப்பதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு அங்கிருந்து போலீசார் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பேரில் வசந்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |