Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு தொடர் அழைப்புகள்… கையில் குழந்தையுடன்… பெண் செய்த காரியம் …!!

இளம்பெண் ஒருவர் தன் குழந்தையுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை இரவில் பெட்ரோல் நிலையம் மீது பெண் ஒருவர் காரை மோதுவதற்கு முயற்சி செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் காரிலிருந்து இறங்கிய அந்த பெண் மேம்பாலத்தை நோக்கி நடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு இரண்டாவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் கையில் குழந்தையுடன் ஒரு பெண் பாலத்தை நோக்கி நடந்து செல்வதாகவும் மேலும் அதன் பின்பு அவரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் காவல் துறையினருக்கு மூன்றாவதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதில் ட்ரக் ஓட்டுனர் ஒருவர்  தான் சென்று கொண்டிருந்த சாலையில் பாலத்திலிருந்து ஏதோ ஒன்று தன் டிரக்கின் மேல் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த டிரக்கின் மீது விழுந்துள்ளது அந்த பெண் மற்றும் அவரின் குழந்தை தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தங்களுக்கு விடுக்கப்பட்ட மூன்று அழைப்புகளுமே அந்த பெண் தொடர்புடையது தான் என்று அறிந்துள்ளார்கள்.

அதாவது Memphis என்ற பகுதியை சேர்ந்த Tonisha Barker (26) மற்றும் அவரின் குழந்தை jonaathan jones (1) இவர்கள் தான் ட்ரக்கின் மீது விழுந்துள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பெண் குழந்தையுடன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. எனினும் கொரோனா களப்பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் Tonisha கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டார் என்று அவரின் பாட்டி தெரிவித்துள்ளார். மேலும்  காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |