கனடாவில் பூட்டியிருந்த வீட்டில் சடலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா கால்கிரியின் வைட்ஹார்ன் பகுதியில் இருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா,பெண்ணா மேலும் அவரின் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் அந்த நபர் யாரென்றும் எப்படி இறந்தார் என்றும் தெரியாததால் இதனை மர்ம மரணம் என்று கூறி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.