Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினர் இனி செல்போன் பயன்படுத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!

பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவித்துள்ளார்.

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்கள் பயன்படுத்துவதை  ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், எனவும் ஏதேனும் அவசர காரணம் எனில் முறையாக அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறையின் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பணி நேரத்தில் காவல் துறையினர், அமைச்சு பணியாளர்கள் செல்போன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |