காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெட்டி கடை உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடியில் பெட்டி கடை ஒன்றில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது அந்த கடையின் உரிமையாளரான அருணாச்சலம் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் ஆகியோர் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அருணாச்சலம் மற்றும் விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.