Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் திருச்சி …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி NSP ரோடு பெரிய கடைவீதி சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பொது மக்களின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதனால் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க திருச்சி மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் உள்ள கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்திரம் பேருந்து நிலையம் முதல் மலைக்கோட்டை வரை பல்வேறு பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு இரண்டு ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |