காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action என்ற இணையதள முகவரிக்கு பதிவு செய்ய வேண்டும்.
பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்க வேண்டும். அத்துடன் 20 முதல் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதில் BC, BC (M), MBC/DNC உள்ளிட்ட பிரிவினருக்கு 32 வயது வரை இருக்கலாம் என்றும் SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு 32 வயது வரை இருக்கலாம் என்றும் திருநங்கைகள் உள்ளிட்ட அவருக்கு 35 வயது வரை இருக்கலாம் எனவும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு , உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு போன்ற தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பணியில் நியமிக்கப்படுவார்கள் மாத சம்பளமாக 36, 900 முதல் 1,16, 600 வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு என்சிசி அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர் 5மதிப்பெண் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது. மேலும் இதற்கு ஆன்லைன் முறையில் வருகிற ஏப்ரல் மாதம் 7ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://tnusrb.tn.gov.in./pdfs/siadvertisement.pdf அல்லதுhttps://tnusrb.tn.gov.in./pdfs/informationbrochuresubinspectorofpolice.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.