Categories
தேசிய செய்திகள்

காவல்துறையை கதற வைத்த ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் போக்குவரத்து காவலரை கார் ஓட்டுநர் காரில் அடித்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று வாகன சோதனையின் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்வதற்காக போக்குவரத்து காவலர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஓட்டுனர், காரை வைத்து காவலரை அடித்து தூக்கி உள்ளார். அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஓட்டுனருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த காரின் ஓட்டுனர் காவலரை அடித்து தூக்கிய சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.

Categories

Tech |