அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர் ஆவார். இவரது விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.
https://youtu.be/mykLsqZ8LYA
இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடித்து வருகின்றார். இயக்குனர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் இணைய தொடர் ஜான்சி. அவர் இயக்கும் முதல் இணைய தொடரும் இதுவே ஆகும். இதில் காவல்துறை அதிகாரியாக அஞ்சலி நடித்திருக்கின்றார் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கின்றதாக இயக்குனர் கூறியுள்ளார் ஸ்ரீ சரண் வாகலா இசையமைக்க ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த தொடர் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கிறது. இந்த இணைய தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.