இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கல்லால் தாக்கியதை தன்னுடைய மொபைல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பு செய்ததை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் .
அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மற்றும் மாக்னோலியாவின் முலையில் 27 வயது இளைஞர் ஒருவர் அதிகாலை 1 மணி அளவில் 2 ஆர்லாண்டோ காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் அந்த நபரால் நேரலை செய்யப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் 2 காவல் துறையினர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னாலிருந்து வந்த ஒரு நபர் அந்த காவலரை செங்கலால் அடித்து தாக்கியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் இந்தத் தாக்குதலுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் தாக்கியவரின் பெயர் வில்லியம் டி மெக்லிஷ் (William D McClish) எனவும், அவரது புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த நபர் மீது சட்ட அமலாக்க அதிகாரியை கொலை செய்ய முயற்சித்தல், கொடிய ஆயுதத்துடன் மோசமாக தாக்குதல் மற்றும் கைது செய்யும் வேளையில் எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்.