தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வாறு திமுக அரசின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கூட பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், காவல்துறை என்பது குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.