Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் படப்பிடிப்பு ….!!

சென்னையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் குறும்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது.

சென்னை மவுண்ட்ரோடு போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்கான காட்சிகளை சென்னை ஆலந்தூர் தபால் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தன. விபத்து காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர்.மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் உண்மையில் விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ என்று அங்கு கூடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்கள் விழிப்புணர்வுகாக, விழிப்புணர்வு காட்சிகள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

Categories

Tech |