புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக் ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த 18-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள காவல்துறைக்கு விருந்தினர் மாளிகையில் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்களுக்கு கொரோன பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் சில விண்ணப்பதாரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் உடல் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி உடல்தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களின் புரிதலை ஸ்கேன் செய்து உடனடியாக புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆள் சேர்க்கும் பிரிவிற்கு cmtpap. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுககான மாற்று தேதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மின்னணு ஊடகம், மின்னஞ்சல் மூலம் தனித்தனியாக அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.