கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். மத பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன்பு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் விரட்டியடித்தனர். இதில் 1 இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன.இந்த . வன்முறையைத் தொடர்ந்து ஹூப்ளி நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது