உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை ஆணையர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணை செய்தனர்.
மதுரையை சேர்ந்த செல்வகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் உதவி பெறும் வகையில் ரதயாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மதுரையில் அனைத்து இடங்களிலும் ரதயாத்திரை வாகனங்களை இயக்க காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி வாங்கினர். நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறையினர் அதை நடைமுறைப் படுத்தவில்லை.
எனவே செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல்துறை ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்து அவரை விசாரிக்க வேண்டும் என அவரது மனுவில் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா நீதிமன்றம் வழங்கும் உத்தரவை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் எனவும், ரதயாத்திரை வாகனத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் மதுரை காவல் துறை ஆணையர் மார்ச் 1ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்து இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.