திருச்சி காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியில் உள்ளவர்களைத் சாடி பேசி தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதலே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை நியமித்து ஒவ்வொரு தொகுதிகளையும் கண்காணித்து வருகின்றது.
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் பணங்களை பட்டுவாடா செய்துவருகின்றது. அதிகாரிகள் சிலரை தேர்தல் இல்லாத பயணிகளுக்கு மாற்றி வருகின்றது. அதேபோன்று தற்போது திருச்சியை சேர்ந்த காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.