Categories
சென்னை மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு…. சென்னையில் நாளை இலவச பயிற்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வு  சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பாக இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தட்டச்சு செய்து தங்களது பெயர், பதிவு எண்ணை 9786844111 என்ற மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9786844111, 9710375604 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |