காவல் தேர்வு எழுத சென்றவர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (24) என்பவர் காவல் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் காவலர் தேர்வு நடைபெற்றது. அதனை எழுதுவதற்காக தனது பைக்கில் பெரியவண்ணன் சென்றுள்ளார். அப்போது உடையாபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது.
இதனால் பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அருகில் இருந்தவர்கள்,ஓடி வந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் போலீசார் பெரியண்ணன்னி ன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் லாரி ஓட்டுநரை தேடி வருகிறார்கள்