காவல் நிலையகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் , மார்தாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் காவல்நிலைய குடியிருப்புகளில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி நேற்று தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டடு தூய்மை பனி நடைபெற்றது . இந்த தூய்மை பணியானது காவல் நிலையங்கள், வளாகம், அருகில் அமைந்துள்ள காவல்நிலைய குடியிருப்பு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர். இந்த தூய்மை பணியை துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.