சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு கைதி காவல் நிலைய கதவின் ஓட்டை வழியாக கைவிளங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சென்னை மண்ணடி அங்கப்பன் பகுதியை சேர்ந்த 25 வயதான அருண் என்பவரை போலீசார் பிடித்தனர். ராஜாஜி சாலையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர் விலங்கிடப்பட்டு காவால்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
போலீஸ் நிலையத்தில்காவலர்கள் அசந்த நிலையை பயன்படுத்திய அருண் காவல் நிலையத்தில் பின்பக்க கதவு ஓட்டை வழியாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வரும் நிலையில் காவல் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.