கர்நாடக மாநிலம் கௌரிபிதனுர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் பூனைகளை வளர்க்க முடிவெடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் எலித்தொல்லை அதிகமாக உள்ளதாலேயே காவல்துறையினர் இந்த பூனைகளை வளர்க்க முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை கடித்து சேதப்படுத்தி வருகின்றன. எலிகளை பிடிக்க பல வழிகளில் முயற்சி செய்தும் போலீசாரால் எலிகளை முழுமையாக காவல் நிலையத்தை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் தான் காவல் நிலையத்தில் இரண்டு பூனைகளை கொண்டு வந்து காவல்துறையினர் வளர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பின் எலித் தொல்லைகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.