தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட் செய்துள்ள அவர்,
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும். (2/2)
— O Panneerselvam (@OfficeOfOPS) July 30, 2020