Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு”…. வீடுகளில் முடங்கிய மக்கள்… ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே முனியப்பன்நகர் சாலை ஒரு ஆள் உயரத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பியது.

அதனால் முனியப்பன் நகர் தனித்தீவாக மாறிவிட்டது. இதனிடையில் அங்குள்ள சுமார் 250 வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர். குடியிருப்புபகுதிக்கு போகும் சாலை முழுதும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த காவிரி முருகன் என்பவர் கூறியிருப்பதாவது “சில வருடங்களுக்கு முன் காவிரிக் கரையில் குடியிருந்த எங்களுக்கு அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயச் சந்திரன் முயற்சியால் முனியப்பன்நகர் உருவாக்கப்பட்டு, எங்களுக்கு மனை இடங்கள் வழங்கப்பட்டது. அவற்றில் தற்போது வீடுகள் கட்டப்பட்டு பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகிறோம்.

காவிரியில் நீர்மட்டம் உயர்ந்தாலே இந்த சாலை தண்ணீருக்கு அடியில் சென்றுவிடும். இதற்கிடையே அவ்வப்போது வெள்ளம் அதிகரிக்கும்போது ஒன்று (அல்லது) 2 நாட்களில் வெள்ளம் வடிந்துவிடும். தண்ணீர் நிரம்பினாலும் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் பெரியபாதிப்பு இருக்காது. இருப்பினும் காவிரியில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றால் மக்கள் நடந்துசெல்ல முடியாத நிலை ஏற்படும். ஆகவே எங்களது பகுதி மக்களுக்காக தனியாக ரோடுபோடும் திட்டம் இருந்தது.

எனினும் தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் எங்களுக்கு இந்த ஒரே சாலை தான் இருக்கிறது. காலையிலிருந்தே இங்கு இருந்து யாரும் வெளியே செல்ல முடியவில்லை. வெளியே சென்றிருந்த சிலரும் நீச்சல் அடித்து தான் வீடுகளுக்கு வந்தனர். இதனால் பெண்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. ஏதேனும் அவசரங்கள் எனில் அருகிலுள்ள கரும்புக் காட்டுக்குள் புகுந்துதான் போக வேண்டும். மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் அதுவும் சாத்தியமில்லை. எங்களது சிரமத்தை கருத்தில்கொண்டு விரைவில் எங்கள் முனியப்பன் நகருக்கு மாற்று சாலை அமைத்துதர வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |