காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது . அதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் இரு கறைகளையும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. என்னுடைய தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 400 கன அடியாக அது குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.எனவே காவிரி கரையோரமாக வசிப்பவர்கள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.