தமிழகத்தில் உள்ள காவேரி நதியில் மாசு பொருட்கள் கலந்துள்ளதால் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நீர் தொழில்நுட்பத்துறை முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் போன்றவற்றின் நிதி உதவியுடன் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது.
இதையடுத்து காவேரி நதிநீரை இரண்டு ஆண்டுகளாக கண்காணிப்பு மேற்கொண்டு அதில் அதிகரித்து வரும் மாசுக்களை ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவிரி நதியில் அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், கன உலோகங்கள், மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றில் மாசுகள் கலந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் காவிரியில் நன்னீர் பகுதிகளிலும் மருத்துவ மாசுக்கள் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மாசுப் பொருட்கள் கலக்கும் மற்ற நீர்நிலைகளில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.