Categories
தேசிய செய்திகள்

காவிரி ஆற்றின் நடுவே மேகதாது அணை…. இந்த வருடமே பணியை தொடங்குவோம்…. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை….!!!!!

கர்நாடக மாநில முதல்-மந்திரியான பசவராஜ் பொம்மை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஐஐடி நிறுவனங்களை போன்று இந்த மாநிலத்தில் 6 தொழில்நுட்பம் நிறுவனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளேன். இதன் வாயிலாக ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று கருதி அதில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
இதையடுத்து மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால்தான் பட்ஜெட்டில் மேகதாது திட்டத்துக்கு ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். ஆகவே அனுமதி கிடைத்தவுடன் இந்த வருடமே மேகதாது திட்டப்பணிகளானது துவங்கப்படும் என்று அவர் பேசினார்.

Categories

Tech |