Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 2,50,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி போன்றவைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த மக்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்து வெளியேற வலியுறுத்தி கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |