காவிரி ஒழுங்காற்று குழுவின் 36 வது கூட்டம் அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடந்து முடிந்தது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 36வது கூட்டம் அந்தக் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.தமிழகம் சார்பாக திருச்சி நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் பட்டாபிராமன் ஆகிய அனைவரும் பங்கேற்றனர். மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
அந்தக் கூட்டத்தில் 4 மாநில பிரதிநிதிகளும் தங்கள் மாநிலத்தில் பெய்த மழை அளவு, அணைகளுக்கு வந்த நீரின் அளவு, அணைகளில் இருக்கின்ற நீர் இருப்பு,வினியோகிக்கப்பட்ட நீரின் அளவு போன்ற புள்ளி விவரங்கள் அனைத்தையும் குழுத் தலைவரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு இந்த ஆண்டிற்கான நீரியல் நீர்வரத்து தணிக்கை நடந்தது.அது மட்டுமன்றி முக்கிய இடங்களுக்கு தேவையான தொலைத் தொடர்பு கட்டமைப்பு பற்றி கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அதிகாரிகள் பேச முயற்சி செய்ததற்கு தமிழக அதிகாரிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.