Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. தண்டோரா மூலம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநில கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.எஸ்.ஆர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்றைய காலை 8 மணி நேரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியே எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,18,671 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி கரையோரம் உள்ள சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஊராட்சி கோட்டை, குருப்பத்நாயக்கன்பாளையம், பவானி, சூரியம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பானது இடத்திற்கு செல்ல வருமானத்துறையின் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த பகுதிகளில் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு வெள்ள அபாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவேரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் காவிரி கரைக்கு செல்லவும், அங்கு நின்று செல்பி எடுத்துக் கொள்ளவும் வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அந்த பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் யாரும் காவிரிக்கு செல்லாதவாறு தடுப்பு அமைத்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

Categories

Tech |