Categories
மாநில செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்: யாருடையது தெரியுமா?…. அமைச்சர் துரைமுருகன் கூறும் விளக்கம்….!!!!

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புது கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு ஆகிய ஆறுகளில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இருக்கிறோம்.

வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தி.மு.க அரசு மேற்கொள்ளும். மேட்டூர்-சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் வாயிலாக சென்ற அ.தி.மு.க ஆட்சியில் ஒருதுளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி-கோதாவரி இணைப்புத்திட்டப் பணிகள் மற்ற மாநிலங்களிலும் தாமதமாக நடந்து வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம் என்பது அ.தி.மு.க அரசு திட்டம் அல்ல, அது மத்திய அரசினுடைய திட்டமாகும்.

தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக்கொள்ளளவை எட்டி இருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் ஒருவரைகூட பணி நிரந்தரம் செய்யவில்லை. எனினும் வருகிற 5 வருடங்களில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்ந்த தேவையான நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொள்ளும்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |