Categories
தேசிய செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்… சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர கர்நாடகா முதல்வர் முடிவு….!!!

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்வதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் நேற்று டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது திட்டம் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களுக்காக செயல்படுத்தப்பட இருப்பதால் விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கு சட்டரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மேகதாது திட்டம் குறித்து சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை செய்தார்.

இந்த கூட்டத்தில், திட்டம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது மாநில அரசு அங்கு எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை தெரிவித்ததாவது: மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த முறை விசாரணைக்கு வரும் பொழுது கர்நாடகத்தின் நிலை குறித்து நாங்கள் தெரிவிப்போம். தமிழ்நாடு அரசு காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு வழக்கு தொடரப்படும் என்றும், இதற்கு மத்திய அரசிடம் நாங்கள் ஆட்சேபனை தெரிவிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |