காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.