Categories
தேசிய செய்திகள்

காவிரி நதிநீர் மேலாண் ஆணைய கூட்டத்தில்… மேகதாது குறித்து விவாதம் நடக்கும்… கர்நாடக முதல்வர் தகவல்…!!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்ட விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

பெங்களூரு மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டம் அவசியம் என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இத்திட்டத்தில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய காவிரி நீரின் அளவு மேலும் குறையும் என்று தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |