Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணி….‌ கூடுதலாக ஒரு அலுவலகத்தை திறந்த கலெக்டர்..!!

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக கூடுதல் அலுவலகத்தை கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், காவிரி- வைகை -குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு சுமார் 572 ஹெட்டர் நிலம் கையக மேற்கொள்ள அரசால் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த பணிகள் ஒரு தனி மாவட்ட வருவாய் அலுவலர், மூன்று தனி வட்டாட்சியர் ஏற்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. மேலும் இந்த பணியை அரசு உத்தரவின்படி துரிதமான முறையில் முடிப்பதற்கு ஏதுவாக காவிரி -வைகை- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்காக பெரியார் நகரில் கூடுதலாக ஒரு வட்டாட்சியர் அலுவலகம்  உருவாக்கப்பட்டது.

இதை  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இந்தப் புதிய அலகின் மூலம் புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகாக்களில் உள்ள 5 கிராமங்களில் சுமார் 196 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் இதுவரை சுமார் 16 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி, தனி வட்டாட்சியர் விஜயலட்சுமி, பாலகிருஷ்ணன், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |