பெரியார் சிலையை அவமானப்படுத்திய சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழில் டுவிட் செய்துள்ளார்.
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அதன் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்தது.
இதை கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இச்சம்பவம் பற்றி டுவிட்டரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் “எவ்வளவு மிகப்பெரிய வெறுப்பாக இருந்தாலும் ஒரு மகத்தான தலைவரை கண்டிப்பாக களங்கப்படுத்த முடியாது” என பதிவிட்டிருந்தார்.