விவசாய கடன் அட்டைக்கான முகமானது காவேரிபாக்கம் பகுதியில் நடந்தது.
சென்ற 24ஆம் தேதி முதல் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மநீதி, கீழ்வீராணம் ஆகிய ஊராட்சிகளில் கிசான் கடன் அட்டை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
விண்ணப்பங்களை வங்கி பாஸ் புத்தகம், சிட்டா அடங்கல், ஆதார், பான் கார்டு ஆகிய நகல்களுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அருகில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், வேளாண்மை அலுவலர் ஆகிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் விவசாயிகள் இந்த விவசாய கடன் அட்டை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார். இந்த முகாமில் வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் அட்சயா, ஸ்வேதா, விஷ்ணு சுந்தர் ஆகிய பலர் பங்கேற்றார்கள்.