Categories
மாநில செய்திகள்

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. எப்போ வேணாலும் வரும்….. உஷாரா இருங்க….!!!!!

காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1  லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இந்நிலையில்  அதிகாரிகள் மேட்டூர் அணையின்  16 கண் மதகுகள் வழியாக கூடுதலாக தண்ணீரை  வெளியேற்றி வருகிறது. இதனையடுத்து  மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 10:30 மணிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மேட்டூர் அணைக்கு கீழ்பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு மேட்டூர் ஸ்டான்லி அணையின்   உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய  மாவட்ட ஆட்சியர்கள் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |