Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவ வீரர்கள்… குவியும் பாராட்டு…!!!

காஷ்மீரில் கர்ப்பிணிப் பெண்ணை நான்கு மணி பணியில் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான ஷப்னம் பேகத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி அங்கு சாலைகள் முழுவதும் பனி மூடி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.

இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து சுமார் 4 மணி நேரம் முழங்காலளவு பணியில் நடந்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |