Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 பா.ஜ.க.வினர் கொலை …!!

ஜம்மு-காஷ்மீரில் குல்கா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜகவை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டர்.

குல்கா மாவட்டத்தில் உள்ள யூய்க்கேபூரா கிராமப் பகுதியில் இருந்து தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3 பேர் காரில் சென்று கொண்டிருந்த போது அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதில் பியூடா உசேன் என்பவர் குல்கா மாவட்டம் பாஜக பொதுச் செயலராக இருந்தவர். காஷ்மீரில் கட்சிக்காக அயராது உழைத்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக டுவிட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தள்ளார். காஷ்மீரில் கடந்த சில மாதங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பாஜக தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |