ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானின் நாக்பால் பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று தீவிரவாதிகள் உயிரிழந்து வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதேசமயம் சில சமயங்களில் இந்திய வீரர்களும் வீர மரணம் அடைவார்கள்..
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானின் நாக்பால் பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் காவல்துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்..
#UPDATE | One more terrorist killed. Total three killed till now. Search going on. Further details shall follow: J&K Police
— ANI (@ANI) August 30, 2022